தமிழ் இலக்கண நூல்கள் தமிழின் மொழிப்பயன்பாடு, அமைப்பு மற்றும் விதிகளை வரையறுப்பவை. தமிழில் கிடைத்த மிகப் பழமையான முழுமையான நூல் தொல்காப்பியம் ஆகும். இது எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றிற்கும் இலக்கணம் கூறுகிறது. நன்னூல், வீரசோழியம், அகத்தியம், இலக்கண விளக்கம், யாப்பருங்கலம், தண்டியலங்காரம் போன்றவை பிற முக்கிய இலக்கண நூல்களாகும். இவை தமிழில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களையும் விளக்குகின்றன.
முக்கியத் தமிழ் இலக்கண நூல்கள்:
தொல்காப்பியம்: (கி.மு. 4-ஆம் நூற்றாண்டு – தோராயமாக). இதுவே தமிழில் கிடைத்துள்ள மிகத்தொன்மையான நூல். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளைக் கொண்டது.
நன்னூல்: பவணந்தி முனிவரால் எழுதப்பட்டது. தொல்காப்பியத்திற்குப் பிறகு எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் கூறும் மிகச்சிறந்த இலக்கண நூல்.
அகத்தியம்: இதுவே முதல் நூல் என்று கூறப்பட்டாலும், நூல் கிடைக்கவில்லை.
வீரசோழியம்: புத்தமித்திரனார் இயற்றியது.
இலக்கண விளக்கம்: வைத்தியநாத நாவலர் இயற்றியது, இது “குட்டித் தொல்காப்பியம்” எனப்படுகிறது.
தண்டியலங்காரம்: அணி இலக்கணம் கூறும் நூல்.
யாப்பருங்கலம் / யாப்பருங்கலக்காரிகை: யாப்பு இலக்கணம் கூறும் நூல்கள்.
புறப்பொருள் வெண்பாமாலை: புறப்பொருள் இலக்கணம் கூறும் சிறப்பு வாய்ந்த நூல்.
| # | நூலின் பெயர் | இயற்றியவர் | வகை | காலம் | நூல் |
|---|---|---|---|---|---|
| 1 | தமிழி மற்றும் வட்டெழுத்துக்கள் – Tamizhi | தமிழி எழுத்துக்கள் |
|||
| 2 | தொல்காப்பியம் – Tholkaapiyam | தொல்காப்பியர் | இலக்கணம் | தொல்காப்பியம் |
|
| 3 | யாப்பருங்கலக் காரிகை – Yaaparungala Kaarigai | அமிதசாகரர் | இலக்கணம் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு | யாப்பருங்கலக் காரிகை |
| 4 | நேமிநாதம் – Neminaadham | குணவீர பண்டிதர் | இலக்கணம் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு | நேமிநாதம் |
| 5 | வடமலை நிகண்டு – Vadamalai Nigandu | ஈஸ்வர பாரதி | இலக்கணம் | கி.பி.17-ஆம் நூற்றாண்டு | வடமலை நிகண்டு |
| 6 | சூடாமணி நிகண்டு – Soodamani Nigandu | மண்டல புருடர் | இலக்கணம் | சூடாமணி நிகண்டு |
|
| 7 | தண்டி அலங்காரம் – Thandi Alangaram | தண்டியாசிரியர் | இலக்கணம் | தண்டி அலங்காரம் |
|
| 8 | நன்னூல் – Nannool | பவநந்தி முனிவர் | இலக்கணம் | நன்னூல் |
|
| 9 | இலக்கணச் சுருக்கம் – Ilakanachrukkam | ஆறுமுக நாவலர் | இலக்கணம் | இலக்கணச் சுருக்கம் |
|
| 10 | ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம் – Ainthilakanam | வீரமாமுனிவர் | இலக்கணம் | ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம் |
|
| 11 | அகப்பொருள் விளக்கம் – Agaporul Vilakam | நாற்கவிராச நம்பி | இலக்கணம் | அகப்பொருள் விளக்கம் |
|
| 12 | களவியல் என்னும் இறையனார் அகப்பொருள் – Kalaviyal | இலக்கணம் | களவியல் |
||
| 13 | சிதம்பரப்பாட்டியல் – Chidambarapaatiyal | பரஞ்சோதியார் | இலக்கணம் | சிதம்பரப்பாட்டியல் |
|
| 14 | செய்யுளிலக்கணம் – கத்தியரூபம் – Seyyulilaknam | பூவை – கலியாணசுந்தர முதலியார் | இலக்கணம் | செய்யுளிலக்கணம் |