பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பன சங்க காலத் தமிழ்ப் பாடல்களின் தொகுப்பாகும். இவை எட்டுத்தொகை (8) மற்றும் பத்துப்பாட்டு (10) ஆகிய பதினெட்டு நூல்களைக் குறிக்கும். இவை மதுரையில் கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டவை, தமிழரின் அகம் மற்றும் புற வாழ்வியலை எடுத்துரைக்கும் மிகப்பழமையான இலக்கியங்களாகும்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியத் தொகுப்பான பதினெண்மேல்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இது பத்து தனித்தனிப் பாடல்களின் தொகுப்பு. பண்டைத் தமிழரின் அக, புற வாழ்வியல், போர்க்களம் மற்றும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பைப் பாடும் இந்த நூல்கள், ஆற்றுப்படை இலக்கியங்களுக்குப் புகழ்பெற்றவை.
பத்துப்பாட்டு நூல்கள் :
திருமுருகாற்றுப்படை (நக்கீரர்) – முருபெருமானின் ஆறுபடை வீடுகளைப் பாடுவது.
பொருநராற்றுப்படை (முடத்தாமக் கண்ணியார்) – பொருநன் (பாணர்) மன்னனிடம் ஆற்றுப்படுத்துவது.
சிறுபாணாற்றுப்படை (நல்லூர் நத்தத்தனார்) – சிறுபாணனை மன்னனிடம் ஆற்றுப்படுத்துவது.
பெரும்பாணாற்றுப்படை (கடியலூர் உருத்திரங்கண்ணனார்) – பெரும்பாணனை ஆற்றுப்படுத்துவது.
முல்லைப்பாட்டு (நப்பூதனார்) – அகப்பொருள் – முல்லை நிலம்.
மதுரைக்காஞ்சி (மாங்குடி மருதனார்) – மதுரையின் சிறப்பையும், மன்னனின் சிறப்பையும் கூறுவது.
நெடுநல்வாடை (நக்கீரர்) – அகப்பொருள் மற்றும் புறப்பொருள் கலந்தது.
குறிஞ்சிப்பாட்டு (கபிலர்) – அகப்பொருள் – குறிஞ்சி நிலம்.
பட்டினப்பாலை (கடியலூர் உருத்திரங்கண்ணனார்) – சோழனின் புகார் நகர்ச் சிறப்பு.
மலைபடுகடாம் (பெருங்கௌசிகனார்) – கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும்.
சிறப்பம்சங்கள்:
பத்துப்பாட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆற்றுப்படை இலக்கியங்கள் (வழிப்படுத்துதல்).
இவை பண்டைத் தமிழரின் அக மற்றும் புற ஒழுக்கங்களை விளக்குகின்றன.
பெரும்பாலும் நீண்ட பாடல்களைக் கொண்டுள்ளன.
| # | நூலின் பெயர் | இயற்றியவர் | வகை | காலம் | நூல் |
|---|---|---|---|---|---|
| 1 | திருமுருகாற்றுப்படை – Thirumurugaatrupadai | நக்கீரர் | பதினெண்மேற்கணக்கு – பத்துப்பாட்டு | திருமுருகாற்றுப்படை |
|
| 2 | பொருநராற்றுப்படை – Porunaraatrupadai | முடத்தாமக்கண்ணியார் | பதினெண்மேற்கணக்கு – பத்துப்பாட்டு | பொருநராற்றுப்படை |
|
| 3 | சிறுபாணாற்றுப்படை – Sirupaanaatrupadai | நத்தத்தனார் | பதினெண்மேற்கணக்கு – பத்துப்பாட்டு | சிறுபாணாற்றுப்படை |
|
| 4 | பெரும்பாணாற்றுப்படை – Perumbaanaatrupadai | கடியலூர் உருத்திரங்கண்ணனார் | பதினெண்மேற்கணக்கு – பத்துப்பாட்டு | பெரும்பாணாற்றுப்படை |
|
| 5 | முல்லைப்பாட்டு – Mullaipaatu | பதினெண்மேற்கணக்கு – பத்துப்பாட்டு | முல்லைப்பாட்டு |
||
| 6 | நெடுநல்வாடை – Nedunalvaadai | நக்கீரர் | பதினெண்மேற்கணக்கு – பத்துப்பாட்டு | நெடுநல்வாடை |
|
| 7 | மதுரைக் காஞ்சி – Madurai Kanchi | மாங்குடி மருதனார் | பதினெண்மேற்கணக்கு – பத்துப்பாட்டு | மதுரைக் காஞ்சி |
|
| 8 | குறிஞ்சிப் பாட்டு – Kurinji Paatu | கபிலர் | பதினெண்மேற்கணக்கு – பத்துப்பாட்டு | குறிஞ்சிப் பாட்டு |
|
| 9 | பட்டினப் பாலை – Pattinapaalai | கடியலூர் உருத்திரங்கண்ணனார் | பதினெண்மேற்கணக்கு – பத்துப்பாட்டு | பட்டினப் பாலை |
|
| 10 | மலைபடுகடாம் – Malaipadukadaam | பெருங்கௌசிகனார் | பதினெண்மேற்கணக்கு – பத்துப்பாட்டு | மலைபடுகடாம் |